டிட்வா சூறாவளிக்குப் பின்பு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனமானது கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒரு இலவச 24/7 (24 மணிநேரமும் வாரத்தின் 7 நாட்களும்) உதவிச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அவசர உதவிச் சேவையானது, 24 மணிநேரமும் மருத்துவ ஆலோசனைகளையும் அவசர உதவி ஆதரவையும் வழங்குவதற்காக நிறுவப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தற்போதைய அனர்த்த காலகட்டத்தில் வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் சேவையில் தீவிரமாக ஈடுபடும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன், உதவி தேவைப்படும் அழைப்பாளர்களை மருத்துவ ஆலோசனைக்கு இணைக்கும் பணியை இச் சேவை மேற்கொள்ளும்.
அத்தோடு, வெள்ளம் காரணமாக ஏற்பட்ட காயம், காய்ச்சல் நிலைமைகள், நீரினால் பரவும் நோய்கள், சுவாசிப்பதில் சிரமம் அல்லது வெள்ளம் காரணமாக எழும் வேறு எந்தச் சுகாதாரப் பிரச்சினையினாலும் பாதிக்கப்பட்டுள்ள எவரும், 247 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் உடனடியாகத் தேவையான மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இச் சேவை வழங்குகிறது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அணுகுவதை எளிதாக்கும் வகையில், இலங்கையின் அனைத்துத் தொலைபேசி அழைப்பு வலைப்பின்னல்கள் மூலமாகவும் இந்தச் சேவையை மேற்கொள்ள முடியும்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










