அனுராதபுரத்தில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான சமஸ்தலங்கா தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றிய மட்/ககு/ கிரான் மத்திய கல்லூரியின் குழுநடனம் (கீழ் பிரிவு) மாணவர்கள் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டனர்.
இக்கல்லூரியின் சார்பில் மாகாணமட்டப் போட்டிகளில் முதலாம் இடங்களைப் பெற்ற குழுநடனம் (கீழ் பிரிவு) மற்றும் குழுப்பாடல் (சிரேஸ்ட) அணியினர் தேசியமட்டப் போட்டிகளில் பங்குபற்றியிருந்த நிலையில் குழுநடனத்தில் போட்டியிட்ட மாணவர்கள் முதலாம் இடத்தினைப் பெற்று கல்லூரிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
கிரான் மத்திய கல்லூரியின் வரலாற்றில் நடனப் போட்டி ஒன்றில் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் எனவும், இந்த வெற்றி கல்லூரியின் முதல்வர் திரு.மா.தவராஜாவின் வழிகாட்டலில், ஆசிரியர்களான செல்வி. ந.வினோதா, திருமதி ஜனிஷா தயாரூபன் மற்றும் பழையமாணவன் திரு.ஜேசுசகாயம், சங்கீத ஆசிரியை திருமதி சேஷயனா சீகரன் ஆகியோரின் கடின முயற்சியில் பெறப்பட்டதெனவும் தெரிவிக்கப்படுகிறது.
One Response
Congratulations