இந்த வருடத்தின் இதுவரையான காலத்தில் ஒரு டிரில்லியன் ரூபாய் சுங்க வருமானம் கிடைத்துள்ளதாகச் சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் தெரிவித்துள்ளார்.
எட்டு மாதத்திற்குள் ஒரு டிரில்லியன் ரூபாய் சுங்க வருமானம் கிடைக்கப்பெற்றது இலங்கை சுங்கத் திணைக்கள வரலாற்றில் முதல் தடவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் 2024ஆம் ஆண்டிற்கான சர்வதேச நாணய நிதியத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 1.5 டிரில்லியன் ரூபாய் வருவாய் இலக்கை அடைந்துகொள்ள முடியும் என்றும் சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇