மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவைகள் இன்று (02 .12.2025) இடம்பெறும் என புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பிரதான மார்க்கத்தில் புகையிரத சேவைகள் அம்பேபுஸ்ஸ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக என புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
புத்தளம் மார்க்கத்தில் புகையிரத சேவைகள் கொச்சிக்கடை வரை மட்டுமே இருக்கும் எனவும், களனி வெளி மற்றும் கரையோர மார்க்கங்களில் சேவைகள் வழமை போல் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வேளை, தற்போது நிலவும் சீரற்ற வானிலையினால் பொல்கஹவெல, ரம்புக்கனை, குருநாகல், கனேவத்த, சிலாபம் மற்றும் புத்தளம் ஆகிய இடங்களுக்குச் செல்ல முடியாததால் பிரதான மற்றும் புத்தளம் மார்க்கங்களில் 18 புகையிரதங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










