பெரண்டினா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்தினால் ஒரு தொகுதி உணவு அல்லாத அத்தியாவசியப் பொருட்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜிடம் 05-12-2025 அன்று கையளிக்கப்பட்டன.

இப்பொருட்கள் பெரண்டினா நிறுவனத்தின் வட-கிழக்கு முகாமையாளர் தினேசினால் மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டதுடன் அந்நிகழ்வில் பெரண்டினா நிறுவன உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் வெள்ளம் காரணமாக போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் வகையில் வாழைச்சேனை பிரதேச செயலகத்தினூடாக நாசிவன்தீவு கிராமத்திற்கு வெளியிணைப்பு இயந்திரப் படகொன்றும் பெரண்டினா நிறுவனத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்ததக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects