கல்கிஸ்சை பௌத்த மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கல்கிஸ்சை பௌத்த மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.

குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

கல்கிஸ்சை பௌத்த மகளிர் கல்லூரியின் மாணவர்களுக்கு பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் நடைமுறையான அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த கல்லூரி, ஜனாதிபதி செயலகம் மற்றும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து குறித்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்வில், ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே மற்றும் பிலியந்தலை வலயக் கல்விப் பணிப்பாளர் குமுது ஹேமமாலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர குறிப்பிடுகையில், மாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக அவர்கள் மத்தியில் நல்ல பழக்கவழக்கங்களை ஏற்படுத்தி அதன் மூலம் வாழ்க்கையை வெற்றிகரமாக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

மாணவர் பாராளுமன்ற முறைமையானது எதிர்காலத்தில் சுறுசுறுப்பான அரசியல் தலைவர்களை உருவாக்குவதற்கு வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கிறது என்றும் குறிப்பிட்டார். அத்துடன், மாணவர் பருவத்தில் படைப்பாற்றல் மற்றும் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் குழுக்களின் பிரதித் தவிசாளர் தனது உரையில் வலியுறுத்தினார்.

மேலும், இலங்கை பாராளுமன்றத்தின் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) கே.ஆர்.ஹேரத் அவர்கள் பாராளுமன்றத்தின் வகிபாகம், அதன் அமைப்பு மற்றும் பாராளுமன்றத்தின் பணிகள் முன்னெடுக்கப்படும் முறைமை குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

கல்கிஸ்சை பௌத்த மகளிர் கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஆரம்பித்ததை அடுத்து, சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினர் பதவியேற்றனர். அதனையடுத்து, மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் அமைச்சுக்கள் மூலம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து சபைக்கு அறிவித்தனர்.

இதன்போது மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு விருந்தினர்களால் சான்றிதழ்களுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் நிறைவாக கல்கிஸ்சை பௌத்த மகளிர் கல்லூரியின் அதிபர் எம்.கே.கே.எம். பெர்னாண்டோ நன்றியுரையாற்றியதுடன், மாணவர்களின் எதிர்காலத்திற்காக இலங்கைப் பாராளுமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தொடர் நிகழ்ச்சிகளுக்கான பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects