நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது (28.02.2025) பிற்பகல் 12.30 மணி முதல் (01.03.2025) பிற்பகல் 12.30 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி , பதுளை மாவட்டத்தின் பசறை, ஹாலிஎல, கந்தகெட்டிய , ஊவா பரனகம, மீகஹகிவுல, சொரணதொட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










