2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வரும் வாரத்தில் வெளியிடப்படும் என கல்விப் பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன அறிவித்துள்ளார்.
தற்போது பரீட்சார்த்திகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெற்றதுடன், இதற்காக 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










