பிரதான மார்க்கங்களில் புகையிரத சேவைகள் தாமதம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அம்பேபுஸ்ஸ மற்றும் அலவ்வ இடையேயான புகையிரத சேவை ஒருவழி மார்க்கத்தில் செல்வதால் பிரதான மார்க்கங்களில் புகையிரத சேவைகள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, புத்கமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பழைய குளம் உடைந்துள்ளமையினால் அம்பேபுஸ்ஸ புகையிரத நிலையம் வரை புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டது.

இருப்பினும், உடைந்த பழைய குளம் 09.12.2025 அன்று சரிசெய்யப்பட்டமையால் பிரதான மார்க்கத்தில் அலுவலக புகையிரத சேவைகள் இன்று (10.12.2025) முதல் வழக்கம் போல் இயங்கும் என்றும் புகையிரதத் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

இதே வேளை , பிரதான மார்க்கத்தில் பல அலுவலக புகையிரதங்களை இன்று (10.12.2025) காலை முதல்வழக்கம் போல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, ரம்புக்கன, பொல்கஹவெல, குருநாகல் மற்றும் கனேவத்த ரயில் நிலையங்களில் இருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும் அனைத்து அலுவலக புகையிரதங்களும் இப்போது மீண்டும் பயணத்தைத் தொடங்கியுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் ஜி.டி.ஏ. சமரசிங்க தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects