பதுளை மாவட்டத்தில் ஆரம்பமான டித்வா சூறாவளியினால் சேதமடைந்த நீர்ப்பாசன அமைப்புகளைச் சீரமைக்கும் பணிகள்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டித்வா சூறாவளியினால் சேதமடைந்த நீர்ப்பாசன அமைப்புகளைச் சீரமைக்கும் 2 வார வேலைத்திட்டம் 09.12.2025 அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பமானது. 

வரவிருக்கும் மஹா போக பயிர்ச்செய்கை காலத்திற்கு முன்னதாக நீர் முகாமைத்துவ வலையமைப்புகளை மீட்டெடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தகவல்களின்படி, சூறாவளியால் ஏற்பட்ட பலத்த வெள்ளம் மற்றும் மண்சரிவுகளைத் தொடர்ந்து, மாவட்டத்தின் 1,020 நீர்ப்பாசன அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் குளங்கள், கால்வாய்கள், கரைகள் மற்றும் அணைக்கட்டுகள் ஆகியவை அடங்கும்.

இந்தச் சீரமைப்பு முயற்சி 09.12.2025 அன்று முதல் இம் மாதம் 23 ஆம் திகதி வரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சீரமைப்புப் பணிகள் ஒரு கூட்டுத் தன்னார்வ செயற்றிட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கை இராணுவம், இலங்கை விமானப்படை, விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம், பதுளையில் உள்ள விவசாய அமைப்புகள், மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஆகியோரை உள்ளடக்கிய கூட்டு தன்னார்வ நடவடிக்கையாக இந்த பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

அத்துடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் இதில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects