செவிகளின் கேட்கும் திறன் குறைவதை முன்கூட்டியே கண்டறிய அறிமுகமாகும் புதிய செயலி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன் வாழ்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையானோருக்கு அடிப்படை செவித்திறன் பரிசோதனை செய்து கொள்வதற்கான வசதிகள் கூட இதுவரை கிடைக்கவில்லை.

இந்த பிரச்சினைக்கு வெற்றிகரமான தீர்வாக, உலக சுகாதார அமைப்பு (WHO) ‘WHOears’ என்ற புதிய மொபைல் செயலியை (App) அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய மென்பொருளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கும், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஒரு சிறப்பு உலகளாவிய நேரலை இணையவழி கலந்துரையாடலை (Webinar) நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த செயலி ஏன் சிறப்பானது?

இலவசமாகப் பெறலாம்: இந்த செயலியை எண்ட்ராய்டு (Android) மற்றும் ஆப்பிள் (Apple) போன்கள் மற்றும் டெப்லெட்களில் முற்றிலும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

குறைந்த செலவு: ஒரு டெப்லெட் மற்றும் சாதாரண ஹெட்போன் (Headphones) உதவியுடன், அமைதியான எந்தவொரு இடத்திலும் மிகக் குறைந்த செலவில் செவித்திறன் பரிசோதனையை இதன் மூலம் செய்ய முடியும்.

வழிகாட்டுதல்கள்: 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட எவருடைய செவித்திறனையும் பரிசோதிப்பதற்கான படிப்படியான வழிமுறைகளை இந்த செயலி சுகாதார ஊழியர்களுக்கு வழங்குகிறது.

இந்தத் திட்டத்திற்கு, உதவி தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய கூட்டாண்மை அமைப்பான ‘ATscale’ ஆதரவளித்துள்ளது.

அறிமுக நேரலை இணையவழி கலந்துரையாடல்

இந்த மென்பொருள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நேரலையாகக் காண்பிப்பதற்கும், இதனை சமூகத்திற்குக் கொண்டு சேர்ப்பது குறித்து விவாதிப்பதற்கும் நடத்தப்படும் இந்த இணையவழி கலந்துரையாடல் அனைவருக்கும் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பின்வரும் துறைகளைச் சேர்ந்தவர்களை இதில் இணையுமாறு உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது:

சமூக சுகாதார ஊழியர்கள் மற்றும் வைத்தியர்கள்.

சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் திட்ட மேலாளர்கள்.

செவித்திறன் மற்றும் காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் (Audiologists & ENT Specialists).

ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGOs).

காதுகேளாமைப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்காக சுகாதார ஊழியர்களைத் தயார்படுத்துவதை இந்த ‘WHOears’ செயலி மூலம் உலக சுகாதார அமைப்பு எதிர்பாக்கிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects