கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் 06.09.2025 அன்று அமுல்படுத்தப்பட்டிருந்த 09 மணித்தியால நீர் விநியோகத்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளுக்கும் பத்தரமுல்ல, பெலவத்த, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, நுகெகொடை, நாவல, மஹரகம, பொரலஸ்கமுவ, இரத்மலானை, தெஹிவளை, மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், நீர் விநியோகத்தடை ரத்து செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










