லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

லிட்ரோ சமையல் எரிவாயு மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் 05.04.2026 அன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

அதன் அடிப்படையில், லிட்ரோ 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 4,765 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

அதே வேளை 5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 308 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 1,910 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 140 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 890 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் , லாஃப்ஸ் சமையல் எரிவாயு 12.5 கிலோ கிராம் நிறையுடைய கொள்கலனின் விலை 1070 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 5,700 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 418 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 2,280 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects