மட்டக்களப்பில் நான்காம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்காம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரனின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 17.12.2025 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இதன் போது மாவட்டத்திற்கான கணக்காய்வு ஐய வினாக்கள் மற்றும் ஒதுக்கீடுகள் மற்றும் செலவினங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் இக்காலாண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மேலும் இவ் வருடத்தின் மூன்றாம், காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக தெளிவூட்டப்பட்டது.

இக் கூட்டத்தில் கணக்காய்வு முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் ரீ.பிரபாகரன் மற்றும் அமைச்சின் உள்ளக கணக்காய்வாளர் என்.பொண்ராணி, சிரேஸ்ட உதவி கணக்காய்வாளர் நாயகம் எம்.எச்.எம்.அரபாத் நிகழ்நிலை தொழில்நுட்பம் ஊடாக கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஶ்ரீகாந்த், மாவட்ட பிரதம கணக்காளர் காயத்திரி ரமேஸ், மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர் ரீ.சுமன், கணக்காய்வு அத்தியட்சகர் ரொபட், பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், உள்ளககணக்காய்வு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects