டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவால் சேதமடைந்த புகையிரத கட்டமைப்பை புனரமைக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருகோணமலை – கொழும்பு சரக்கு புகையிரத சேவை 16.12.2025 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று, அம்பேவெல மற்றும் பதுளைக்கு இடையேயான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மஹாவ முதல் பொலன்னறுவை வரையிலான சேதமடைந்த புகையிரத கட்டமைப்பை புனரமைக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு – புகையிரதப் பாதை புனரமைக்கப்பட்டாலும், அது இன்னும் புகையிரத போக்குவரத்துக்காக திறக்கப்படவில்லை.
அதன்படி, கலா ஓயா பாலத்தின் புனரமைப்புக்குப் பின்னர், கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரத போக்குவரத்து சாத்தியமாகும் என்று புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










