மலையகப் புகையிரத மார்க்கத்தில் பதுளை மற்றும் அம்பேவெலவிற்கு இடையில் புகையிரதங்களை நாளை (20.12.2025) முதல் சேவையில் ஈடுபடுத்த புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, பதுளை புகையிரத நிலையத்திலிருந்து மு.ப 9.00 மணிக்கும் பி.ப 3.00 மணிக்கும் இரண்டு புகையிரத சேவைகள் அம்பேவெல வரையிலும், அம்பேவெல புகையிரத நிலையத்திலிருந்து மு.ப 9.30 மணிக்கும் பி.ப 3.00 மணிக்கும் இரண்டு புகையிரத சேவைகள் பதுளை வரையிலும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புகையிரதங்கள் குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு (AC) முன்பதிவு ஆசனங்களைக் கொண்ட இரண்டு பெட்டிகள், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு முன்பதிவு ஆசனங்களைக் கொண்ட தலா ஒரு பெட்டி ஆகியவற்றுடன் இயக்கப்படும்.
இதேவேளை, கிழக்கு புகையிரத மார்க்கத்தில் கொழும்பு கோட்டை மற்றும் திருகோணமலைக்கு இடையிலான புகையிரத சேவைகளும் நாளை (20.12.2025) முதல் இயக்கப்படவுள்ளன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










