மட்டக்களப்பில் “முகத்தூர் முழக்கம்” உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரானது லைட் ஹவுஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் லைட் ஹவுஸ் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் லைட் ஹவுஸ் மைதானத்தில் 17.03.2024 அன்று நடைபெற்றது.
லைட் ஹவுஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் வி.கபிலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்துகொண்டார்.
முகத்தூர் முழக்கம் உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரில் 36 உதைப்பந்தாட்ட அணியினர் கலந்து கொண்டு நட்பு ரீதியான உதைப்பந்தாட்ட போட்டிகளில் கலந்துகொண்டனர்.
இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில், இளைஞர்கள் வெற்றி தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்வதுடன் ஒழுக்க விதி முறைகளை கடைப்பிடிப்பதற்கு சிறந்த களமாக போட்டிகள் காணப்படுவதாகவும் இப் போட்டியில் விளையாடும் வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு கடுமையான பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இறுதிப் போட்டியாக லைட் ஹவுஸ் விளையாட்டுக்கழகமும் காஞ்சிரங்குடா ஜெகன் அணியினருக்கும் இடையில் போட்டி நடைபெற்றது.
இரு அணியினரும் கோல் எதுவும் பெறாத நிலையில் பெனால்டி முறையில் லைட் ஹவுஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி வாகை சூடியது.
இரண்டாம் இடத்தினை காஞ்சிரன் குடா அணியினரும் மூன்றாம் இடத்தினை இக்னேசியஸ் அணியினரும் நான்காம் இடத்தினை சன்பிளவர் அணியினரும் பெற்றுக் கொண்டனர்.
இந் நிகழ்வில் சிரேஸ்ட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன் விசேட அதிதியாக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇