பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைக்கும் செயலமர்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைக்கும் செயலணியினரின் பிரதேசமட்ட திட்டமிடல் 2ம் கட்ட அமர்வு பயிற்சி பட்டறை 06 .11.2023 அன்று காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதரதலைமையில் IWARE நிறுவனத்தின் பங்களிப்புடன் காத்தான்குடி வீச்வே தனியார் விடுதியில் இடம் பெற்றது.

இப்பயிற்சிப் பட்டறையில் திருமதி. சுபத்திரா யோகசிங்கம் மற்றும் ஏ.சொர்ணலிங்கம் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

இச் செயலமர்வில் காத்தான்குடியில் இயங்கி வருகின்ற GBV Forum இன் செயற்பாடுகளை நெறிப்படுத்தி செயலணிக்கான Terms of Reference ஐ வரைவதன் மூலம் மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைந்தது பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளை கையாளும் செயற்திறனான பொறிமுறைகளை உருவாக்குதல் தொடர்பில் பல்வேறு தலைப்பிலான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, காதி நீதிபதி, சமுர்த்தி தலைமை முகாமையாளர், கிராம உத்தியோகத்தர் நிர்வாக உத்தியோகத்தர், நகரசபை நிருவாக உத்தியோகத்தர், மத்தியஸ்த சபை தவிசாளர், பொலிஸ் உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects