இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 22 இலட்சத்து 58 ஆயிரத்து 202 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் பின்னரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து இலங்கைக்கு வருகை தருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 510,133 ஆகும்.

ஜெர்மனியிலிருந்து 141,941 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 174,267 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 204,703 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 103,477 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 129,403 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 106,155 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்

அத்துடன், இந்த மாதத்தின் முதல் 21 நாட்களில் 154,609 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects