தொற்றா நோய் தொடர்பான கந்துரையாடல் நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றா நோய்களை தடுப்பதும் கட்டுப்படுத்துவதற்கான மாவட்ட பல்துறை வழிகாட்டல் குழுக்கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ( 02.11.2023 ) அன்று இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் மற்றும் வைத்தியர் இ.உதயகுமார் கலந்துகொண்டனர்.

நாட்டில் 83% மரணங்கள் தொற்றா நோயினால் இடம்பெற்றுள்ளமை தரவுகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாடசாலை மட்டத்தில், அலுவலக மட்டம் மற்றும் சமூக மட்டத்தில் உள்ளவர்கள் தமது உடலை வலுப்படுத்துவதற்கு தேவையான மாற்றத்தை எற்படுத்த வேண்டும் என இங்கு சுட்டிக் காட்டப்பட்டது.

உடல் பயிற்சியின்மை, தவறான உணவு பழக்க வழக்கம், மதுபானம் மற்றும் புகைத்தல் பாவனைகள் மூலம் தொற்றா நோய் தொடர்பாக இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.

இதன் போது புகைத்தல் தடை செய்யபட்ட பகுதிகளாக மாவட்டத்தில் பல இடங்களை உள்வாங்க வேண்டும் என இதன் போது கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்தமையை கருத்திற்கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், திணைக்கள தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects