கிழக்கு மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில், தங்கம் வெள்ளி வெண்கலம் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்த அம்பாறை திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை (03) பாடசாலை அதிபர் தட்சணாமூர்த்தியின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சாதனை படைத்த மாணவர்களை ஏற்றிய ஊர்தியானது பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி திருக்கோவில் பிரதான வீதி வழியாக சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்ததும் சாதனையீட்டிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
16வயதிற்கு கீழ் பரிதி வீசுதலில் வினோதன் விகாஸ் தங்கப்பதக்கமும் ஜெயச்சந்திரன் ஆகாஸ் வெண்கலப் பதங்கத்தினையும் பெற்று இருந்ததுடன், 16வயதிற்குட்பட்ட சட்டவேலி தாண்டல் போட்டியில் மகேந்திரன் விபுசனன் வெள்ளிப் பதக்கத்தினையும், ஜெயச்சந்திரன் ஆகாஸ் வெண்கலப்பதக்கத்தினையும் பெற்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
இவ் நிகழ்வில் திருக்கோவில் வலயக் கல்வி பணிப்பாளர் உதயகுமார், பிரதேச கல்விப் பணிப்பாளர் ரவீந்திரன், பாடசாலையின் உப அதிபர், விளையாட்டுத்துறை ஆசியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
இதேவேளை நடந்து முடிந்த கிழக்கு மாகாண மட்ட 17 கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையில் நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில், திருக்கோவில் கல்வி வலயமானது 13 தங்கம் 05 வெள்ளி 06 வெண்கலம் என 24 பதக்கங்களைப் பெற்று மாகாணத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்று சாதனைப் படைத்துள்ளமை சிறப்பம்சமாகும் .