இலங்கை வந்துள்ள போலந்து சுற்றுலா விமானம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

போலந்தின் குளிர்கால சுற்றுலா தொடக்க விமானம் (Inaugural Flight) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை 23.12.2025 அன்று வந்தடைந்துள்ளது.

ஸ்மார்ட் விங்ஸ் (Smart Wings) விமான சேவைக்குச் சொந்தமான 3Z-7648 என்ற இலக்கமுடைய இந்த விமானம், போலந்தின் வார்சோ (Warsaw) நகரிலிருந்து நேற்று இரவு 10.10 மணியளவில் தரையிறங்கியது. 

இம்முதற்கட்டப் பயணத்திற்காக போயிங் 737 ரக விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இதில் 180 சுற்றுலாப் பயணிகளும் 9 விமானப் பணியாளர்களும் வருகை தந்தனர். 

இந்த விமான சேவை 2026 மார்ச் 15 ஆம் திகதி வரை வாரத்திற்கு ஒரு முறை (ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும்) இடம்பெறவுள்ளது. 

இவ்விமானம் மூலம் வருகை தரும் போலந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் கடற்கரையோரப் பகுதிகள், சிகிரியா, தம்புள்ளை, கண்டி, நுவரெலியா மற்றும் யால ஆகிய பகுதிகளுக்குச் சுற்றுலா செல்லவுள்ளனர். 

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போலந்து சுற்றுலாப் பயணிகளை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் சுற்றுலா நிறுவன அதிகாரிகள் வரவேற்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects