மீண்டும் ஆரம்பமான கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பிரிருந்து, திருகோனமலை, கொழும்பு, புகையிரத சேவைகள் மீண்டும் 24.12.2025 அன்று முதல் மீண்டும்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் துரித முயற்சியினால் றீ பில்ட் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒரு கட்டமாக சேதமடைந்த ரயில் பாதைகள் திருத்தப் பணிகள் யாவும் நிறைவடைந்ததன் பின்பு கடந்த சில நாட்களாக பரிச்சாத்த சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததை அடுத்து 24.12.2025 அன்று அதிகாலை 5  மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கான உதயதேவி புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை 24.12.2025 அன்று காலை திருகோணமலையிலிருந்து கொழும்பிற்கான சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இருந்து செல்லும்  பயணிகள் கல் ஓயா சந்தியில் இறங்கி திருகோணமலையில் இருந்து வரும் கொழும்பு புகையிரதத்தில் மாற வேண்டும்.

இதேவேளை மாகோவில் இருந்து மட்டக்களப்புக்கான சரக்கு மற்றும் எரிபொருள் சேவைகளும் 24.12.2025 அன்று தொடக்கம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டதாக புகையிரதத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects