ஜனாதிபதி செயலக ஊழியர்களின் புத்தாண்டு கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு 01.01.2026 அன்று காலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
முதலில், புத்தாண்டு கடமைகள் ஆரம்பிப்பதைக் குறிக்கும் வகையில் அரச சேவை உறுதிமொழி வழங்கல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் செயலாளர் அனைவருக்கும் புத்தாண்டுக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர், அரச சேவையில் Role Model ஆக ஜனாதிபதி அலுவலகத்தை மாற்றி ஜனாதிபதியின் நாட்டுக்கான தொலைநோக்கு மற்றும் திட்டத்தை யதார்த்தமாக்க புத்தாண்டில் வலுவான உறுதியுடன் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று தெரிவித்தார்.
குழுவாக இணைந்து பணியாற்றுவதன் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர்,மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவதற்காக கடந்த ஆண்டு ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா மற்றும் மக்களை வறுமையிலிருந்து மீட்கும் ‘சமூக சக்தி’ போன்ற முதன்மைத் திட்டங்களை புதுப் பலத்துடன் செயல்படுத்தி அதன் பலனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அனைவரும் கைகோர்க்குமாறு அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதி அலுவலகம் டிஜிட்டல் மயமாக்கலுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஜனாதிபதி நிதியத்தை பிரதேச மட்டத்தில் செயல்படுத்தியதாகவும் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், உள்ளக விவகாரங்களில் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவித்து வருவதாகவும் அதற்காக விருதுகள் கூட கிடைத்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு கடந்த பேரிழவினால் ஏற்பட்ட பின்னடைவை தாங்கிக் கொண்டே இந்த அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர்,குழு மனப்பான்மையுடனும் முறையான திட்டத்துடனும் பணியாற்றுவதன் மூலம் இந்த சவால்களை எளிதாக சமாளிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந் நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர்களான ரோஷன் கமகே, கபில ஜனக பண்டார, ரஸ்ஸல் அபொன்சு, சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










