தனியார் துறை ஊழியர்களுக்கும் இனி ஓய்வூதியம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தனியார் துறை ஊழியர்கள், ஊழியர் சேமலாபா நிதியை (EPF) ஒரே தவணையில் பெறுவதற்குப் பதிலாக, அந்த நிதியை ஓய்வூதியமாக நிதியைப் பெறும் முறை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 

பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க 06.01.2026 அன்று இதனைத் தெரிவித்துள்ளார். 

அதன் அடிப்படையில், ஓய்வு பெற்ற பிறகு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புக்காகவே, சேமலாப நிதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

எனினும், தனியார் துறை ஊழியர்கள் சேமலாப நிதியை ஒரே தவணையில் பெறும்போது அவர்களின் சமூகப் பாதுகாப்பு ஆபத்துக்கு உள்ளாகிறது என்று ஜெயசிங்க கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே, தனியார் துறை ஊழியர்களும் ஓய்வு பெற்றதும் காலம் முழுவதும் ஓய்வூதியம் பெறும் வகையில் ஓய்வூதியத் திட்டம் போன்ற ஒரு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்று பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects