கலாசார அலுவல்கள் திணைக்களமும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய வாசிப்பு மாதத்தின் முன்னிட்டு வாசிப்போம் அனுபவிப்போம் எனும் தொனிப்பொருளில் அமைந்த நூல் விபரண வேலைத் திட்டமானது 24.11.2023 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வில் பிரதேச செயலகப் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பத்து பாடசாலைகளில் இருந்து 30 மாணவர்கள் பங்கு பற்றியமையோடு, அந்த மாணவர்கள் அனைவரும் தாங்கள் வாசித்த புத்தகத்தை பற்றிய கருத்தாடலை அனைவர் முன்னிலையிலும் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வில் பிரதேச எழுத்தாளர்களான சிரேஸ்ட ஊடகவியலாளர் ரவிந்திரன்(ரவிப்பிரியா), எழுத்தாளர் அதிபர் நா. நாகேந்திரன், இளம் எழுத்தாளர், ஆசிரியர் ப. அனேஜா ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் முப்பது வகையான புத்தகங்கள் பற்றியும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது
இந் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது தேசிய ரீதியிலும் அனைவரினதும் கவனத்தை ஈர்த்த ஒரு நிகழ்வாக அமைந்ததுடன், பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு ப.ராஜதிலகன் மற்றும் திருமதி பக்தகெளரி மயூரவதனன் ஆகியோர் இணைந்து இவ் நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇