காலநிலை மாற்றம் தொடர்பான விசேட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் 28.01.2025 அன்று இடம் பெற்றது.
கமத்தொழில், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உலக வங்கியின் நிதி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய CSIAP (Climate Smart Irrigated Agriculture Project) திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்ட செயற்பாடுகள் தொடர்பான தெளிவூட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கரடியனாறு, செங்கலடி, ஆயித்தியமலை போன்ற பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உணவு உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான வீட்டுத் தோட்டம் அமைத்தல், மனித யானை மோதலை தடுப்பதற்கு மின்சார வேலிகளை அமைத்தல், விதைப் பருப்புக்கள் உற்பத்தி செய்து வழங்கள், விவசாயம் மேற்கொள்வதற்கு குழாய் கிணறுகள் அமைத்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிகழ்வில் திட்டப்பணிப்பாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன மற்றும் திட்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் அலகின், திட்டத்தின் கிழக்கு மாகாண பிரதித்திட்ட பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










