93 நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பில் உலர்உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி மற்றும் வடமுனைக் கிராமங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 155 குடும்பங்களுக்கான உலர்உணவுப் பொதிகள் 10-01-2026 அன்று Friends of 93 எனப்படும் 93 நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பில் வழங்கப்பட்டன.

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சிங்கப்பூர் தமிழர்கள் மற்றும் அமரர்களான திரு. திருமதி.கார்த்திகேசு சின்னத்தம்பி ஆகியோரின் ஞாபகார்த்த நிதி அனுசரணையில் ஒவ்வொன்றும் சுமார் நான்காயிரம் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

குறித்த கிராமங்களுக்கான கிராமசேவை உத்தியோகத்தர்கள் மூலமாகத் தெரிவு செய்யப்பட்ட 155 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இவ் உலர்உணவுப் பொதியில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன், பொங்கலுக்குத் தேவையான பொருட்கள் அடங்கிய பொதியொன்றும் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வில் 93 நண்பர்கள் அமைப்பின் சார்பாக சக்தீஸ்வரன், கிருபாகரன், சுரேஷ், குலேந்திரன் மற்றும் முரளிதரன் ஆகியோரும், வாகனேரி கிராம சேவை உத்தியோகத்தர் சண்முகம் குரு, வடமுனை கிராம சேவை உத்தியோகத்தர் லதீஸ் உட்பட கிராம தலைவர்கள், கோயில் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

93 நண்பர்கள் அமைப்பு என்பது மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி, புனித மிக்கேல் கல்லூரி மற்றும் சிவாநந்த வித்தியாலயம் என்பவற்றில் 1990 இல் சாதாரண தரமும், 1993 இல் உயர்தரமும் கற்ற நண்பர்கள் இணைந்த ஒரு அமைப்பு என்பதுடன், இவ் அமைப்பினால் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் எனப் பல்வேறு சமூகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects