காத்தான்குடி பிரதேச செயலகத்தின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத்தின் வழிகாட்டலுக்கமைவாக சமுர்த்தி தலைமையக முகாமையாளரும், நலன்புரிச்சங்கத்தின் தலைவியுமான திருமதி.பீ.ஜெயராஜ் தலைமையில் 10.01.2026 அன்று மருதமுனை தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலாளராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக கணக்காளராக கடமையாற்றி தற்போது பட்டிப்பளை பிரதேச செயலக கணக்காளராக கடமையாற்றும் கே.சித்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கணக்காளர் முப்லி, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
மேலும் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், பாடல், பட்டிமன்றம் போன்ற கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
பிரதேச செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள், இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.த. சாதாரன தரத்தில் 9A சித்திகள், க.பொ.த.உயர் தரத்தில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவித்து நினைவுச்சின்னங்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









