மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2050 ஆம் ஆண்டளவில் பூச்சிய நிகர கார்பன் உமிழ்வு இலக்கை எட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, தனியார் நிறுவனமொன்றினால் மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட 20 மெகாவோட் கொள்ளளவு கொண்ட ‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ காற்றாலை மின்நிலையம் 15.01.2026 அன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டது.

‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ காற்றாலை மின் திட்டத்தின் கீழ், நாட்டின் எரிசக்தி வரலாற்றில் முதல் முறையாக, ஒரு இயந்திரத்தின் கொள்ளளவு 05 மெகாவாட் கொண்ட இலங்கையில் நிறுவப்பட்ட மிகப்பெரிய 4 காற்றாலை இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன.

இலங்கை வரலாற்றில் அரச அல்லது தனியார் துறையின் கீழ் 5 மெகாவோட் கொள்ளளவு கொண்ட இயந்திரங்களைப் பயன்படுத்தி நிறைவு செய்யப்பட்ட முதலாவது காற்றாலை மின் திட்டம் இதுவாகும் என்பதுடன், முழுமையான உள்நாட்டு நிறுவனம் ஒன்றினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வலு சக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி, வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ், மன்னார் மாவட்டச் செயலாளர் கே.கனகேஸ்வரன், இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ஷெர்லி குமார, இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் விஜேந்திர பண்டார ஆகியோருடன், CEYLEX Renewables நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் சமீர கணேகொட மற்றும் அதன் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects