மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழுக் கூட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழுக் கூட்டமானது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 14.01.2026 அன்று நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஞானமுத்து ஸ்ரீநேசன், இராசமாணிக்கம் சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோரது பங்கேற்புடன் இக் கூட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது முன்னேற்ற மீளாய்வு செய்யப்பட்டதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான முன்மொழிவுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் இம்மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள், விவசாயம், நீர்ப்பாசனம், சுகாதாரம், சுற்றாடல், வீதிகள், பாலங்கள் அமைத்தல், யானை வேலி அமைத்தல், சிறு குளங்களை புணரமைத்தல், பாதுகாப்பான புகையிரத கடவை அமைத்தல், காணி பிரச்சினைகள், மேய்ச்சல்தரை பிரச்சினை, ஆளணியினர் பற்றாக்குறை, குடிநீர் வழங்கல், கிறவல் அகழ்வு உட்பட்ட மேலும் பல திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் முக்கியமாக காணப்படும் மக்கள் நலப்பணிகளை தெரிவு செய்து துரிதகதியில் நிறைவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ரீ.ஏ.சி.என்.தலங்கம, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள், செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த அபிவிருத்திக்குழு தலைவர் கடந்த வருடம் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 99 வீதமான நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் இதன் போது தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects