வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தங்கள் ஜூன் மாதம் 01 ஆம் திகதியுடன் நிறைவு – பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தச் செயல்பாட்டின் கீழ், உரிமைக்கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் காலம் ஜூன் முதலாம் திகதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்னா் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருக்குமானால் அதனை சரி செய்துகொள்ள நடவடிக்கை எடுக்கவும் என பெப்ரல் அமைப்பினர் நிறைவற்று பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தச் செயல்பாட்டின் கீழ், உரிமைக்கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் காலம் மே 05 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் மாதம் 01 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.

அதன்படி, தற்போது நடைமுறையிலுள்ள வாக்காளர் பெயர் பட்டியல், அதிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்களின் பெயர்ப் பட்டியல், அதில் புதிதாக சேர்க்கப்பட வேண்டியவர்களின் பெயர்ப் பட்டியல் ஆகியவற்றைச் சரிபார்த்து, ஏதேனும் ஒரு நபர் தனது பெயரோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரோ அந்த ஆண்டிற்காக பரிந்துரைக்கப்படவில்லை எனத் தெரியவந்தால், அதற்கான உரிமைக்கோரல்களை முன்வைக்க முடியும்.

அதேபோன்று, வாக்காளராகப் பதிவு செய்யத் தகுதியற்ற ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பின், அதற்கு எதிராக ஆட்சேபனைகளை முன்வைக்கவும் மேற்கூறிய 28 நாட்கள் கால அவகாசத்திற்குள் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாக்காளர் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக மாவட்ட தேர்தல் அலுவலகம், பிரதேச செயலகம்,உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள், கிராம உத்தியோகத்தர் அலுவலகம் ஆகிய இடங்களில் காட்சிப்படுத்தப்படும். அங்கு சென்று விபரங்களைச் சரிபார்த்து உரிமைக்கோரல்கள் அல்லது ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும். இதற்கான விண்ணப்பப் படிவங்களை உங்கள் கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கு மேலதிகமாக, தேர்தல் ஆணைக்குழுவின் www.elections.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று, 2026 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு விபரங்களின் வரைபை சரிபார்க்கலாம். ஒருவேளை உங்கள் பெயர் அதில் இல்லையெனில், இணையதளத்தில் தரவிறக்கம் செய்யக்கூடிய உரிமைக்கோரல் படிவத்தைப் பூர்த்தி செய்து, தபால் மூலமாகவோ அல்லது இணைய வழியாகவோ சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க முடியும்.

அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்களின் இறையாண்மை அதிகாரத்தை உண்மையாகவே நடைமுறைப்படுத்தக்கூடியது வாக்குரிமையின் மூலமாகும், அதனால் வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் உள்வாங்கப்பட்டிருப்பது ஒரு கட்டாயத் தேவையாகும் என்பதை வலியுறுத்துகிறோம்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects