மழையுடனான வானிலையினால் நாளாந்த மின்னுற்பத்தியில் 65 வீதம் நீர்மின்சாரத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், கடந்த சில நாட்களிலேயே அதிகளவிலான நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தமது அதிகாரசபைக்கு உட்பட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவின் 88 வீதம் வரை உயர்வடைந்துள்ளதாக இலங்கை மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நீர்மின் உற்பத்திக்காக அதிகளவிலான நீர் தற்போது விடுவிக்கப்படுவதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇