நாட்டில் நிலவி வரும் வரட்சியுடனான காலநிலையால் இன்று (21.01.2026) கொழும்பு உட்பட பல பகுதிகளில் வளியின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் (NBRO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன் பிரகாரம், ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை, பொலன்னறுவை, அநுராதபுரம், வவுனியா, புத்தளம், காலி ஆகிய பகுதிகளில் இன்று காலை வேளையில் வளியின் தரச் சுட்டெண் (AQI) ஆரோக்கியமற்ற (Unhealthy) நிலையை எட்டியுள்ளது.
வளியின் தரம் குறைந்துள்ளதால், பொதுமக்களுக்குச் சுவாசக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், ஆஸ்துமா அல்லது இதயம் தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.
சுவாசக் கோளாறுகள் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
வெளியில் செல்லும்போது தகுந்த முகக்கவசங்களை (N95 போன்றவை) அணிவது சிறந்தது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










