அவுஸ்திரேலியாவில் இருந்து ஏத்தாலைக்குளத்திற்கு இலட்சக்கணக்கான புலம்பெயர் வலசை பறவைகள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு ஏத்தாலைக்குளத்தில் அவுஸ்திரேலியாவில் இருந்து வரும் இலட்சக்கணக்கான புலம்பெயர் வலசை பறவைகள் வருகை தந்துள்ளது.

இங்கு Australian white ibis போன்ற பறவைகள் ஆண்டுதோறும் வந்து இனப்பெருக்கம் செய்து குஞ்சுகளை வளர்க்கும் ஒரு முக்கியமான பறவைகள் சரணாலயம் இது, குறிப்பாக குளிர்கால மாதங்களில் ஆயிரக்கணக்கான பறவைகளை இங்கு காணலாம்.

மட்டக்களப்பு மாவட்ட குருக்கள்மடம் கிராமத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் (வலசைப் பறவைகள்) இங்கு வந்து தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.

Australian white ibis போன்ற புலம்பெயர் பறவைகளும் நியூசிலாந்து நாட்டுப் பறவைகளும் அதிகம் காணப்படுகின்றன. குளிர்கால மாதங்களில் (டிசம்பர், ஜனவரி போன்ற) மாதத்தில் அதிகளவிலான பறவைகளைக் காணலாம். பறவைகள் இங்கு முட்டையிட்டு குஞ்சு பொரித்து, குஞ்சுகளுக்கு உணவளித்து வளர்க்கின்றன.

நவம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் பறவைகளைக் காணலாம். பின்னர் ஏப்ரல், மே மாதங்களில் தன் குஞ்சுகளுடன் மீண்டும் உரிய நாடுகளுக்கு திரும்பிச் செல்கின்றது.

இது மட்டக்களப்பின் முக்கிய சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். பறவைகளின் இனப்பெருக்கத்தைப் பார்ப்பதற்காக உள்ளூர் சுற்றுலா பிரயாணிகள் அதிகளவிலானோர் பார்வையிட்டு வருவதும் உண்டு.

இயற்கையாக அமைந்த இந்த சுற்றுச்சூழல் பறவைகளுக்கு முக்கிய வாழ்விடமாகவும் சொர்க்கமாக கருதப்படுகின்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects