பராமரிப்பு பணிகளுக்காக செயலிழக்கச் செய்யப்பட்ட நுரைச்சோலை லக்விஜய அனல்மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின்னுற்பத்தி இயந்திரம் 29 .11. 2023 அன்று தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் 300 மெகாவாட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர், பொறியியலாளர் நொயெல் ப்ரியந்த தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தொழிநுட்பக் கோளாறு காரணமாக செயலிழக்கச் செய்யப்பட்ட நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இரண்டாவது மின்னுற்பத்தி இயந்திரத்தை, எதிர்வரும் 16.12.2023 ஆம் திகதியளவில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇