இன்று இலங்கை – இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் போட்டி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (22.01.2026) நடைபெறவுள்ளது. 

இப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் மூன்று போட்டிகளைக் கொண்டுள்ளது. 

ஒருநாள் தொடரைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி 20 (20/20) கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளதுடன், அதன் முதலாவது போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி பல்லேகலையில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், இன்றும், எதிர்வரும் 24 மற்றும் 27 ஆம் திகதிகளிலும், கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு அரங்கை அண்மித்த வீதிகளில் இந்த விசேட போக்குவரத்து கண்காணிப்பு திட்டம் அமுல்படுத்தப்படும் என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. 

அதன்படி, பிரதீபா மாவத்தை, சத்தர்ம மாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை, கெத்தாராம வீதி, 100 அடி வீதி, போதிராஜ மாவத்தை, வின்சன்ட் பெரோரா மாவத்தை, பிரிட்டோ பாபபுல்லே வீதி ஆகியவற்றில் விசேட போக்குவரத்து கண்காணிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

எவ்வாறாயினும் குறித்த வீதிகள், மூடப்படவோ அல்லது, போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவோ மாட்டாது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நண்பகல் 12 மணி முதல் , போட்டி நிறைவடையும் வரை குறித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து கண்காணிப்பு திட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைத்துக் கொள்வதற்கு, மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு, வாகன சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects