மேல் மாகாணத்தில் காலநிலை பாதிப்பு குறைவடைந்துள்ள சகல பாடசாலைகளும் இன்று (05.06.2024) ஆரம்பிக்கப்பட்டுள்ளது என மேல் மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து இரத்தினபுரி கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று (05.06.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் நிவித்திகல கல்வி வலயத்திற்கு உட்பட்ட எலபாத்த, அயகம மற்றும் கலவானை பிரதேச பாடசாலைகளுக்கும் இன்று (05.06.2024) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள சகல அரச பாடசாலைகளுக்கு இன்று (05.06.2024) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇