கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘AL SEEB’!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘AL SEEB’ இன்று (22.01.2026) விநியோக மற்றும் சேவை விஜயத்திற்காக இலங்கை தீவை வந்தடைந்தது.

அதன் அடிப்பையில், கொழும்பு துறைமுகத்தை வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படை கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்றது.

குறித்த ‘AL SEEB’ என்ற போர்க்கப்பல்75 மீட்டர் நீளம் கொண்டது.

அத்தோடு ‘AL SEEB’ என்ற போர்க்கப்பலை லெப்டினன்ட் கமாண்டர் Hamad Bin Mohammed Aldarmaki தலைமை தாங்குகிறார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயம் இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே தொழில்முறை அறிவு பரிமாற்றம் மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது, அதன் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களைப் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது. 

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects