மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி கோட்டத்தின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களின் “கற்பனையிலிருந்து கண்டுபிடிப்பை நோக்கி” எனும் தொனிப்பொருளிலான கோட்ட மட்ட புத்தாக்க கண்காட்சி காத்தான்குடி கோட்டக் கல்வி பணிமனையின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் ஏ.ஜீ.எம். ஹக்கீம் தலைமையில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம். அமீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 27.11.2023 அன்று காத்தான்குடி ஜாமிஉழ்ழாபிரீன் பாடசாலையில் அங்குரார்ப்பணம் செய்து வைத்திருந்தார்.
குறி்த்த புத்தாக்க கண்காட்சி நிகழ்வு 27 .11.2023 அன்று பாடசாலை மாணவர்களுக்கும், 28. 11.2023 அன்று பொது மக்களுக்குமாக இரண்டு தினங்கள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் மத்தியிலே ஆராய்சியுடன் கூடிய புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையிலும் (STEM) கல்வி முறையை நோக்கி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், இளம் விஞ்ஞானிகளையும், கண்டுபிடிப்பாளர்களையும் உருவாக்கும் பொறிமுறையின் ஆரம்பகட்ட செயற்பாடாக இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கண்காட்சியின் மூலம் காத்தான்குடி பிரதேச மாணவர்களின் புத்தாக்கமும், கண்டுபிடிப்பு ஆற்றலும் வெளிக்கொணரப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும் .
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇