மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசெயலகமும் கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் ,அகிலன் பவுண்டேசனின் அனுரணையிலும் இணைந்து நடாத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் 31.12.2023 அன்று போரதீவுப்பற்று பிரதேச கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன், போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் வி.கௌரிபாலன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேசசெயலக உதவிப் பிரதேச செயலாளர் துலாஞ்சனன், இலங்கைக்கான அகிலன் பவுண்டேசன் பணிப்பாளரும் போரதீவுப்பற்று பிரதேச மரணவிசாரனை அதிகாரியுமான வீ.ஆர்.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளை கௌரவித்ததுடன் அவர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும் , நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் மரக்கன்றுகள் குடைகள் என்பன வழங்கப்பட்டன.
இந் நிகழ்விற்கு முழு அனுசரணை வழங்கிய அகிலன் பவுண்டேசன் மற்றும் கிராம உத்தியோகஸ்தர் ஆகியோருக்கு பிரதேச செயலகத்தினால் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇