மண்முனைப்பற்று பிரதேச வருடத்தின் முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மண்முனைப்பற்று, ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் இவ் வருடத்திற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதரின் (பதிற்கடமை) ஒழுங்குபடுத்தலில் 29.01.2026 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி சிறிநாத் மற்றும் கலாநிதி எம்.எல்.எ.எம் ஹிஸ்புள்ளா ஆகியோருடன் மண்முனைப்பற்று பிரதேசசபை தவிசாளர் காத்தலிங்கம் செந்தில்குமார் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உதவி பிரதேச செயலாளர் கி.இளம்குமுதன், நிருவாக உத்தியோகத்தர் மற்றும் அரச திணைக்களங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்

இக் கலந்துரையாடலில் 2025ம் ஆண்டில் நடைபெற்று முடிவடைந்த திட்டங்கள் மற்றும் 2026ஆம் ஆண்டுக்காக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் திணைக்களங்களினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அத்துடன் கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்படும் கொடுப்பனவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

பிரதேசத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் தேவைகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கு உரித்துடைய பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் என்ற வகையில் எதிர்கால நடவடிக்கைகள் தற்போதுள்ள பிரச்சனைக்கான தீர்வுகள் மற்றும் கோரிக்கைகளுக்கு தீர்மானங்களும் எடுத்துரைக்கப்பட்டன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects