இலங்கையின் திரைப்படங்களையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் குவியம் ஊடக நிறுவனத்தினரால் மற்றுமொரு புதிய முயற்சியாக சினிமா கலைஞர்களை ஒன்றிணைக்கும் வகையிலான நட்சத்திர கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்று யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் 06.06.2026 அன்று நடைபெறவுள்ளது.
சினிமா முன்னெடுப்புகளுக்கான ஒரு ஊடகமாக இயங்கிவரும் குவியம் ஊடக நிறுவனமானது தனது 6 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியை நடாத்துகின்றது.
குவியமானது முற்றுமுழுதாக சினிமா சார்ந்தவர்களையும், கலைஞர்களையும், படைப்புகளையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.
குறிப்பாக வருடா வருடம் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவை முன்னெடுப்பதுடன் குறும்பட போட்டிகளையும் முன்னெடுக்கின்றனர்.
அந்தவகையில் இவ்வருடம் சினிமா கலைஞர்களை உள்ளடக்கிய 12 அணிகளுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதன்மூலம் சினிமா கலைஞர்களுக்கிடையில் அறிமுகத்தை ஏற்படுத்தவும் அவர்களுக்கிடையிலான நட்புறவை வலுப்படுத்தவும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்வாகவும் இதனை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்முயற்சி வெற்றி பெறவும் தொடர்ச்சியாக பல செயற்பாடுகளை முன்னெடுக்கவும் மதகு ஊடகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.
குவியம் பிரீமியர் லீக்கில் களமிறங்கும் 12 அணிகள்:
Cine Killadies
Shogi Team
Yuktha Production
Grey Squad
Deva Cine Production
Blackboard International
TVK
Batti Blockbuster
Peaky Blinders
Poovarashi Squad
The Artist
Batti Power House





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










