பன்றிகளை இறைச்சிக்காக மாவட்டங்களுக்கு இடையில் கொண்டு செல்வதனை உடனடியாக நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பன்றிகளுக்குப் பரவிவரும் வைரஸ் தொற்று காரணமாக இந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கால்நடைகள் உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி ஹேமலி கொத்தலாவல ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேல், வடமேல் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் இந்த வைரஸ் பரவி வருவதாகவும் அதனைக் கட்டுப்படுத்துவதற்குக் கால்நடை உத்தியோகத்தர்கள் பண்ணையாளர்களுக்கு உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇