நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைளும் இன்று (20.01.2025) மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண பிரதான அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின் பிரகாரம் , வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடாசலைகளுக்கும் விடுமுறை வழங்குவதாக அனைத்து அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (20.01.2025) மற்றும் நாளை (21.01.2025) நடைபெறவிருந்த 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கான 2024 இறுதித் தவணைப் பரீட்சைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் (20.01.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects