2026 ஆம் ஆண்டின் தற்போதைய புள்ளிவிபரங்களின்படி, ஜென் – இசட் (Gen Z) தலைமுறையினர் மது அருந்துவதை பெருமளவு குறைத்து வருகின்றனர்.
இன்றைய இளைஞர்கள் மதுவை வெறும் கொண்டாட்டமாகப் பார்க்காமல், அதன் பின்விளைவுகளான தூக்கமின்மை மற்றும் மதுவால் ஏற்படும் பதற்றம் குறித்து அதிகம் கவலைப்படுகிறார்கள்.
2025-ஆம் ஆண்டின் கேலப் ஆய்வின்படி, 18-34 வயதுடையவர்களில் 50% மானோர் மட்டுமே மது அருந்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
இது இருபது ஆண்டுகளுக்கு முன்பு 72% ஆக இருந்தது.
போதையில் தங்களை மறந்து பொதுவெளியில் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாவதை இளைஞர்கள் விரும்புவதில்லை என கூறப்படுகிறது.
மேலும் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், விலையுயர்ந்த மதுபானங்களை விட ஆரோக்கியமான உணவுகள் அல்லது பயணங்களுக்குச் செலவிட அவர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர்.
மதுபான நிறுவனங்கள் இப்போது தங்கள் கவனத்தை ‘நோ-ஆல்கஹால்’ (No-Alcohol) பானங்கள் பக்கம் திருப்பியுள்ளன.
உணவகங்களின் உணவுப் பட்டியலில் முன்பை விட தற்போது விதவிதமான பான வகைகள் இடம்பெறுகின்றன.
“இது வெறும் தற்காலிகமான மாற்றம் அல்ல ஒரு புதிய கலாசாரத்தின் ஆரம்பம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இளைஞர்கள் இப்போது மதுவை ஒரு கட்டாய சமூக பழக்கமாகப் பார்க்காமல், ஒரு விருப்பத் தேர்வாகவே பார்க்கிறார்கள், என சமூகவியலாளர்கள் கருதுகின்றனர்.
மது அருந்துவது ஒரு காலத்தில் வளர்ந்தவர்களின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது.
ஆனால் இன்று, ‘நிதானமாக இருப்பது’ ஒரு புதிய அடையாளமாக மாறி வருகிறது.
இந்த மாற்றம் பொது சுகாதாரத்தில் மிகப்பெரிய நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










