மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட நகரப் பகுதிகளில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான நடவடிக்கைகள் 02.02.2026 அன்று செயற்படுத்தப்பட்டன.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் உள்ள பொதுச் சந்தை மற்றும் பிரதான வீதியில் உள்ள கடைகள் போன்றவற்றிலே வெற்றிலை மென்று வீதியில் துப்புவது, மது அருந்துவது, புகை பிடிப்பது போன்றவற்றை தடுக்கும் வகையில் விழிப்பூட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டன.
பொதுமக்கள் இவற்றை செய்வார்களாயின், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு மக்களுக்கு விழிப்பூட்டப்பட்டன.
போதைப்பொருள் பாவனை செயற்பாடுகளிலே எவராயினும் ஈடுபடுகின்ற போது பொது சுகாதார பரிசோதகர்கள் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டன.
நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மே. வினோராஜ், பொது சுகாதார பரிசோதகர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு விழிப்பூட்டல் சுவரொட்டிகளை காட்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










