இலங்கையில் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையில் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 1.39 கோடியாக (13.9 மில்லியன்) அதிகரித்துள்ளதாக ‘Datareportal’ நிறுவனம் வெளியிட்டுள்ள ‘Digital Sri Lanka 2026’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்தால் (1.5 மில்லியன்) அதிகரித்துள்ளது.


இருப்பினும், நாட்டின் மொத்த சனத்தொகையில் 40.3 சதவீதமானோர் (சுமார் 9.37 மில்லியன் மக்கள்) இன்னும் இணையத்தைப் பயன்படுத்துவதில்லை என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 இலட்சம் பேர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இது அந்த வயதுப் பிரிவில் 52.5 சதவீதமாகும். சமூக வலைத்தள பயனாளர்களில் 43.4 சதவீதமானோர் பெண்கள் ஆவர்.


யூடியூப் விளம்பரங்கள் சென்றடையக்கூடிய பயனாளர்களின் எண்ணிக்கை 2024 மற்றும் 2025க்கு இடைப்பட்ட காலத்தில் 6.9 இலட்சத்தால் (8.5 வீதம்) அதிகரித்துள்ளது.

2025 ஜூலை முதல் ஒக்டோபர் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் 3.8 இலட்சம் புதிய பயனாளர்களை இது சென்றடைந்துள்ளது.


இன்ஸ்டாகிராம் தளத்தின் விளம்பரத் திறன் 21.6 சதவீதத்தால் (4 இலட்சம் பயனாளர்கள்) அதிகரித்துள்ளது. 2025 அக்டோபர் நிலவரப்படி இந்தத் தளம் மிகவேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.


மெட்டா நிறுவனத்தின் தரவுகளின்படி, இலங்கையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் எண்ணிக்கை காலாண்டு அடிப்படையில் சீரான வளர்ச்சியைக் காட்டி வருகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects