மட்டக்களப்பு மாவட்டத்தின் இளைஞர் யுவதிகளுக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்டத்தில் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தில் பதிவு செய்த இளைஞர் யுவதிகளுக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தில் பதிவு செய்த நபர்களில் 500 நபர்கள் நேர்முக பரீட்சையில் கலந்து கொண்டு அதில் தேர்வு செய்யப்பட்ட 200 பேரில் முதல் கட்டமாக 70 நபர்களுக்கு முன்னனி வர்த்தக ஸ்தாபனமான கீல்ஸ் வர்த்தக நிறுவனத்தில் கடமையாற்றுவதற்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு நியமன கடிதங்கள் வழங்கி கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்… இளைஞர் யுவதிகள் தனியார் துறையில் சேவை செய்து உயர வேண்டும் என்பதுடன் தொழில் வழங்கும் நிறுவனத்திற்கு நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருக்க வேண்டும் என்று கூறி அவர்களை வாழ்த்தினார்.

இந் நிகழ்வுல் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் வி.மைக்கல் கொலின், திருவானந்தராசா, கீல்ஸ் நிறுவன அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects