வாகன இறக்குமதியின் போது விதிக்கப்படும் 50 சதவீத மேலதிக வரி (Surcharge) நடைமுறையை, எதிர்வரும் 2026 டிசம்பர் 31 வரை நீடிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்களின் கீழ் இந்த வரி விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த நடைமுறை 2026 ஆம் ஆண்டு இறுதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 50 சதவீத மேலதிக வரியானது பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் (Used Vehicles) மற்றும் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களுக்கு (Modified Vehicles) தொடர்ந்து விதிக்கப்படும்.
வெளிநாட்டு செலாவணியை முகாமைத்துவம் செய்யும் நோக்குடன் இந்த வரி விதிப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










